காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது மக்களவைத் தொகுதியான வயநாடுக்குச் சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜக மேற்கொண்டுவரும் பொருளாதார கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். நாடு பிரச்னைகளை சந்தித்துவரும் நிலையில், வெளியுலகத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளாமலிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கனவுலகில் வாழ்ந்துவருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
மக்களின் குறைகளுக்கு பிரதமர் செவிசாய்த்திருந்தால், பிரச்னைகள் உருவாகாமல் தடுத்திருக்க முடியும் எனக் கூறிய ராகுல், களநிலவரங்களை மக்களிடமிருந்து திசை திருப்புவதை மோடி பழக்கமாக வைத்துள்ளதாக விமர்சனம் செய்தார். இந்தியாவை கனவுலகில் மிதக்கவிடவே மோடி நினைப்பதாகவும் கிண்டலாகத் தெரிவித்தார்.
ராகுல் அடுத்த இரண்டு நாட்களுக்கு கேரளாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொருளாதாரம் பற்றி மத்திய பாஜக அரசுக்கு ஒன்றும் தெரியாது - சிதம்பரம் குற்றச்சாட்டு