ETV Bharat / bharat

குப்பைத் தொட்டிக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து - தொழிலாளி காயம் - Famous Rowdy anbu Rajini

புதுச்சேரி: குப்பைத் தொட்டிக்குள் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி காயம் அடைந்தார்.

bomb
bomb
author img

By

Published : Jan 13, 2020, 12:08 PM IST

புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெருமாள் நாயுடு வீதி சந்திப்பில் உள்ள குப்பைத் தொட்டிலிருந்து பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி செல்வம் என்பவர் பிளாஸ்டிக், பேப்பர்களை சேகரித்து கடையில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதேபோல் ஞாயிற்றுக்கிழமை குப்பை தொட்டியிலிருந்த பேப்பர்களை எடுத்துக்கொண்டிருந்த போது, அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் அவருடைய கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

குப்பைத் தொட்டியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குப்பைத் தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குப்பைத் தொட்டியில் நாட்டு வெடிகுண்டை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி அன்பு ரஜினி வீட்டின் அருகே உள்ள குப்பை தொட்டியில், நாட்டு வெடிகுண்டு தற்போது வெடித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது!

Intro:புதுச்சேரியில் குப்பை தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Body:புதுச்சேரியில் குப்பை தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெருமாள் நாயுடு வீதி சந்திப்பில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி ஒருவர் வழக்கமாக குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் பேப்பர்களை சேகரித்து கடையில் போடுவது வழக்கம். இதேபோல் இன்றைய தினம் குப்பை தொட்டியில் இருந்த குப்பைகளில் இருந்த பேப்பர் எடுத்து கொண்டிருந்த போது அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்ததில் அவருடைய கையில் பலத்த காயாம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு அனுமதித்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் குப்பை தொட்டியில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குப்பையில் நாட்டு வெடிகுண்டை போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி அன்பு ரஜினி வீட்டின் அருகே இருந்த குப்பை தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:புதுச்சேரியில் குப்பை தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.