ETV Bharat / bharat

கள்ளச்சந்தையால் நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு!

மும்பை: கள்ளச்சந்தை விற்பனை 2018ஆம் ஆண்டை விட 2019இல் 23 விழுக்காடு அதிகமானதால், நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளச்சந்தை
கள்ளச்சந்தை
author img

By

Published : Jul 31, 2020, 6:35 AM IST

கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் போலி பொருள்களை கண்டுபிடிக்கும் அங்கீகார தீர்வு வழங்குநர்கள் சங்கமானது, சர்வதேச ஹாலோகிராம் உற்பத்தியாளர்கள் சங்கம், இன்டர்போலின் கள்ள புலனாய்வு பணியகம் போன்ற உலகளாவிய அலுவலர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

கள்ளச்சந்தையில் கள்ளநோட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. மக்கள் மத்தியில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக எஃப்.எம்.சி.ஜி, ஆல்கஹால், பார்மா, ஆவணங்கள், வேளாண்மை, வாகனம், புகையிலை, ஆடைகள் போன்றவற்றை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக எஃப்.எம்.சி.ஜி துறையும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 63 விழுக்காடு போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை கள்ளச்சந்தை பெரிதும் பாதிக்கிறது.

சங்கத்தின் அறிக்கையின் படி, உத்தரப்பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஜார்க்கண்ட், டெல்லி, குஜராத் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் போலி விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம் தான் கள்ளச்சந்தையில் முதலிடம் வகிக்கிறது.

விலை உயர்ந்த பொருள்களில் மட்டுமே போலியானவை இருக்கும் என்பதில்லை, சீரகம், கடுகு, சமையல் எண்ணெய், நெய், ஹேர் ஆயில், சோப்புகள், மருந்துகள் போன்ற மக்களின் அன்றாட தேவைகள் அனைத்திலும் போலியானவை உள்ளன.

இது குறித்து அங்கீகார தீர்வு வழங்குநர்கள் சங்கத்தின் தலைவர் நகுல் பாஸ்ரிச்சா கூறுகையில், "2018ஆம் ஆண்டை விட 2019ஆம் ஆண்டில் கள்ளச்சந்தை விற்பனை 24 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டில் பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாத இடையில் மட்டும், 150க்கும் மேற்பட்ட கள்ள வழக்குகள் பதிவாகியுள்ளன, பெரும்பாலும் போலி பிபிஇ கருவிகள், சானிடிசர்கள், முகமூடிகள். கரோனா காலத்தை பயன்படுத்தி கள்ளச்சந்தை மறைமுகமாக செயல்பட்டு வருகிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.