ETV Bharat / bharat

ஊழலற்ற ஆட்சி, பாகுபாடற்ற வளர்ச்சிதான் இலக்கு: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

author img

By

Published : Oct 17, 2020, 8:10 PM IST

ஊழல் இல்லாத மற்றும் வெளிப்படையான நிர்வாகம்தான் தனது நிர்வாகத்தின் முன்னுரிமையாக இருக்கும் என்று ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​தெரிவித்தார்.

மனோஜ் சின்ஹா
மனோஜ் சின்ஹா

ஸ்ரீநகர்: கடந்த இரண்டு மாதங்களில், யூனியன் பிரதேசத்தின் கிராமங்கள், நகர்ப்புறங்களை மேம்படுத்துவதற்கும், அரசாங்கத்தை மேலும் பொறுப்புள்ளதாகவும், மக்களால் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கும் நிர்வாகத்தால் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 20 மாவட்டங்களில் எந்தப் பாகுபாடும் இல்லாமல் வளர்ச்சியை மேற்கொள்வதுதான் தனது முதல் மற்றும் ஒரே குறிக்கோள் என்று ஸ்ரீநகரில் ஆளுநர் மாளிகை செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சின்ஹா ​​கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஆன்லைன் கட்டட அனுமதிகள், ஒப்பந்தக்காரர்களின் பில்கள் அனுமதி மற்றும் பணம் வழங்குதல் போன்ற சேவைகளுக்கு விரைவான, இடையூறு இல்லாத தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதை தாம் உறுதி செய்வதாகவும், ஜம்மு கஷ்மீரில் மத்திய நிதியுதவி திட்டங்களை உலகமயமாக்க முயற்சிப்பதோடு மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக தாமதமாகிக் கொண்டிருந்த, பொது மக்களுக்கு பயன்படக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த தற்போதைய முக்கிய திட்டங்களுக்கு ஜம்மு கஷ்மீர் நிர்வாகம் ஒரு உந்துதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

சமீபத்தில் முடிவடைந்த கிராமத்திற்கு செல்வோம் எனும் Back to Village (B2V) நிகழ்ச்சியில் பேசிய அவர், பிளாக் திவாஸ் 285 வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டதாகவும், அதில் சுமார் 4.5 லட்சம் பேர் பங்கேற்றதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது, ​​ B2Vன் முந்தைய கட்டங்களில் தொடங்கப்பட்ட மொத்தம் 13,675 பணிகள் முடிவடைந்ததை அடுத்து மேலும் 5,980 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சியின் போது,​​பஞ்சாயத்துகளுக்கு 4,440 விளையாட்டு கருவிகள் விநியோகிக்கப்பட்டன, தூய்மையை மேம்படுத்துவதற்காக 3,959 குப்பைத் தொட்டிகள் நிறுவப்பட்டன, 2,430 குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் ஒரு வீடு வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்

4,25,258 குடியுரிமை சான்றிதழ்கள், 45,327 சாதி சான்றிதழ்கள் மற்றும் 51,097 பிறப்பு / இறப்பு / ஊனமுற்றோர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாது கூடுதலாக இந்த திட்டத்தின் போது சமூக நல ஓய்வூதியங்களும் அதிக அளவில் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

நகரங்களில் பொது நலன்களை பற்றி கூறும் போது, ​​நிர்வாகம் அக்டோபர் 19 முதல் தொடங்கவுள்ள எனது நகரம் எனது பெருமை (My Town My Pride) இயக்கத்துடன் செயல்படவுள்ளது. எங்களுக்கு நகரங்களில் பொதுமக்களுக்கு சேவை வழங்குதல், ஜனநாயகத்தை அடிமட்டத்தில் வலுப்படுத்துதல், மற்றும் சேவைகளை வீடுகளுக்கே சென்று வழங்கல் என்ற மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளன. உடனடி குறை தீர்வு, மக்களுக்கு உடனடியாக சேவைகளை வழங்குதல் மற்றும் மக்களை சார்ந்த திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவது போன்றவற்றிற்கு நான் அழுத்தம் கொடுத்து வருகிறேன் என்று கூறினார்

செப்டம்பர் மாதத்தில் மட்டும் நீண்டகாலமாக தாமதமாக நடைபெற்று வந்த 44 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் 1798 திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட இருப்பதாகவும் அவர் அறிவித்தார். PMGSYன் செயல்திறனைப் பொருத்தவரை அனைத்து மாநிலங்களை காட்டிலும் நாங்கள் முதலிடத்திலும் இருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே 1,392 கி.மீ. முடித்துள்ளோம், அதில் ஜூன் 1 முதல் அக்டோபர் 15 வரை அதிகபட்ச முன்னேற்றம் ஏற்பட்டது என்று கூறினார்.

"கடந்த இரண்டு மாதங்களில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அறுவடை செயல்முறைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் இலவச கதிரடிப்பு இயந்திரம் விநியோகித்து வருகிறோம். தேவைப்படும் விவசாயிகளுக்கு மானிய விலையில் 500 டிராக்டர்களை வழங்கும் திட்டத்தை நாங்கள் இறுதி செய்துள்ளோம் பெருநகரங்கள், நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பொது வசதிகளின் உள்கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கான தேவைகளை நாங்கள் அடையாளம் கண்டுவருகிறோம். இது நிலையான வடிவமைப்புகள், பொதுவான கருப்பொருள் மற்றும் பொதுவான பிராண்டிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மூன்று மாதங்களுக்குள் சுமார் 700-800 பொது கழிப்பறைகள் நிர்மாணிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம், ”என்றார்.

வணிக ஆதரவு கடனை வழங்குவது பற்றி கூறும்போது, ​​" ரூ.47.90 கோடி, 1,317 பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. கலைஞர்களுக்கு மாதத்திற்கு 1000 ரூபாய் (ஒன்பது மாதங்களுக்கு) நிவாரணத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் குறைந்தது ரூ.1.8 கோடியை செலவிடும்; படகோட்டும் தொழிலாளர்கள், படகு இல்லங்களில் உள்ள வழிகாட்டிகள் ஆகியோருக்கு நிவாரணத் தொகையாக மாதத்திற்கு ரூ .1000 வழங்குவதற்காக அரசாங்கம் 11.95 கோடி செலவிடும்; தொற்றுநோய் பரவல் காரணமாக கட்டுமானத் துறைக்குச் சென்ற ஓட்டுநர்கள், துப்புரவாளர்கள் போன்றோருக்கு ஆறு மாதங்களுக்கு மாதத்திற்கு ரூ.1000 வழங்கப்படும் இதற்காக அரசாங்கம் ரூ.80 கோடியை செலவிடும்; பழைய பேருந்துகளை மாற்றுவதற்காக பேருந்து உரிமையாளர்களுக்கு 50% மானியம் அல்லது ரூ .5 லட்சம் இதில் எது குறைவாக உள்ளதோ அது வழங்கப்படும். இந்த நிவாரணத்திற்காக நாங்கள் சுமார் 25 கோடி ரூபாய் செலவிடுகிறோம்" என்று அவர் கூறினார்.

சுகாதாரத் துறை குறித்து பேசிய சின்ஹா, "2009 மற்றும் 2012ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட காண்டர்பலில் 200 படுக்கை மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் பெமினாவில் உள்ள 500 படுக்கைகள் கொண்ட நவீன குழந்தை மருத்துவமனையின் பணிகள் தேவையின்றி தாமதமாகி வருகின்றன. இந்த திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு, இரு மருத்துவமனைகளும் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளன. 2011 முதல் நத்தை வேகத்தில் நடந்து கொண்டிருந்த காண்டர்பால் யுனானி மருத்துவமனை பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, லிப்ட் அமைப்பது போன்ற சிறிய பணிகள் நிலுவையில் உள்ள நிலையில் மருத்துவமனை பொதுமக்கள் சேவைக்கு தயாராக உள்ளது, " என்றார்.

சம்பா மாவட்டம், விஜய்பூரில் தொடங்கப்பட்டுள்ள எய்ம்ஸ் பணிகள் மூலம் ஆகஸ்ட் 2022க்குள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்க உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஜம்மு கஷ்மீர் மக்களுக்கு தரமான மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் தான் கடமைப்பட்டுள்ளதாகவும் ஜம்மு கஷ்மீர். சுகாதார காப்பீட்டுத் திட்டமான சேஹத் மூலம் யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொரு குடிமகனையும் உள்ளடக்குவதோடு மட்டுமல்லாமல் ஆயுஷ்மான் பாரத்தின் கீழ் சேர்க்கப்படாதவர்களையும் உள்ளடக்கும் என்றார்.

ஜம்மு-கஷ்மீரின் அனைத்து வகையான வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவது பற்றி கூறும்போது, சாலை இணைப்பை வலுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்தும் இந்திய அரசின் சில முக்கிய சாலைத் திட்டங்கள் மூலம் யூனியன் பிரதேசம் மற்றும் அதன் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கிய சோஜிலா சுரங்கப்பாதை ஒரு வரலாற்று மைல்கல் என்றும் கூறினார்.

"ஜம்மு & கஷ்மீர் முழுவதும் சாலை இணைப்பை வலுப்படுத்த இன்னும் ஏழு சுரங்கங்கள் அமைக்கப்பட வேண்டும். காசிகுண்ட் மற்றும் பானிஹால் இடையே 8450 மீட்டர் நீளமுள்ள இரட்டை குழாய் சுரங்கப்பாதை கட்டுமானம் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். 2968 மீட்டர் நீளமுள்ள 6 ஒற்றை சுரங்கங்கள் ரம்பன் மற்றும் பனிஹால் இடையேயான சாலை 2021 டிசம்பரில் நிறைவடைய உள்ளது. கிலானி முதல் கிஷ்த்வார் வரை 450 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை 2022 ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்” என்று அவர் கூறினார்.

4.5 கி.மீ நீளமுள்ள செனானிக்கு சுத்மஹாதேவ் அருகே அனந்த்நாக் சுரங்கப்பாதைக்கு விரிவான திட்ட அறிக்கைகள் DPR தயார் செய்யப்பட்டுள்ளது டெண்டர் விரைவில் வெளியிடப்படும். 10.20 கி.மீ நீளமுள்ள சிந்தன் பாஸ் சுரங்கப்பாதை ரூ .4600 கோடிக்கும், ரூ. 350 கோடி மதிப்புள்ள ஜெலானி பைபாஸ் சுரங்கத்துக்கும் DPRகள் இறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் ரூ5400 கோடி மதிப்புள்ள சத்ரு முதல் அனந்த்நாக் சுரங்கப்பாதை வரை டெண்டர் அதன் DPRம் இறுதி செய்யப்பட்டவுடன் விரைவில் தொடங்கப்படும். அனைத்து திட்டங்களும் வரும் ஆண்டில் தொடங்கப்படும் என்று மேலும் அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.