ETV Bharat / bharat

'கரோனாவால் இறப்பவர்கள் தியாகிகள்'- அசாதுதீன் ஓவைசி ட்வீட்! - கரோனா பரவல், கோவிட்19 பாதிப்பு, கரோனா தியாகிகள்

ஹைதராபாத்: கரோனா (கோவிட்19) பாதிப்பில் இறந்தவர்கள் தியாகிகள் என அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

Coronavirus victims  Asaduddin Owaisi  namaz-e-janazah  Coronavirus in India  'கரோனாவால் இறப்பவர்கள் தியாகிகள்'- அசாதுதீன் ஓவைசி ட்வீட்!  கரோனா பரவல், கோவிட்19 பாதிப்பு, கரோனா தியாகிகள்  அசாதுதீன் ஓவைசி

author img

By

Published : Apr 3, 2020, 1:27 PM IST

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கரோனா தொற்றுநோயால் இறப்பவர்கள் தியாகிகள் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “கோவிட்-19ஆல் இறப்பவர்கள் இஸ்லாத்தில் தியாகிகள் அந்தஸ்தை பெறுகின்றனர். ஆகவே இதுபோன்ற தியாகிகளை அடக்கம் செய்வதற்கு முன்னால் உடலை சுத்தப்படுத்துதலோ (குஸ்ல்) மற்றும் முழு உடலையும் மூடுதலோ (கஃபான்) தேவையில்லை.

தியாகிகளின் உடல்கள் 'நமாஸ்-இ-ஜனாசா' தொழுகைக்குப் பிறகு, சிலரின் முன்னிலையில் உடனடியாக அடக்கம் bசய்யப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். தெலங்கானாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் டெல்லி தப்லிக் இஸ்லாமிய மத மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் ஆவார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மேலும் சிலருக்கு கரோனா தொற்று நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் மாநில அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கரோனா தொற்று நோயாளிகளின் உடலை அடக்கம் செய்வதில் அரசு சில விதிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது.

  • Jis insaan ka inteqaal waba ki wajah se hota hai, Islam mein uska darja shaheed ka hota hai. Shuhadah ko ghusl aur kafan ki zaroorat nahi hoti aur unhein jald se jald dafan kiya jaana chahiye https://t.co/lmQJxf30cZ

    — Asaduddin Owaisi (@asadowaisi) April 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன்படி உடலை யாரும் தொடவோ, கட்டிப்பிடிக்கவோ, முத்தமிடவோ அனுமதியில்லை. இந்நிலையில் ஓவைசி இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி இஸ்லாமிய மதக் கூட்டத்தில் பங்கேற்ற மூவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.