ETV Bharat / bharat

பத்து மில்லியன் குழந்தைகள் ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்படும்!

author img

By

Published : May 24, 2020, 2:52 PM IST

கரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால், உலக அளவில் 10 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளன.

Coronavirus  malnutrition  children  ஊட்டசத்து குறைபாடு  கரோனாவின் தாக்கம்  குழந்தைகள் ஊட்டசத்து குறைபாடு  World Food Programme ( WFP)  WFP  உலக உணவுத் திட்டம்  Lauren Landis
malnutrition

இது குறித்து உலக உணவு திட்டத்தின் ஊட்டச்சத்து இயக்குநர் லாரன் லாண்டிஸ் கூறுகையில், "கரோனாவின் தாக்கம் உலகின் 10 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு தள்ளக்கூடும்.

மோசமான ஊட்டச்சத்திலிருந்து ஏற்கனவே பலவீனமான உடல்களில் இந்த நோய்த் தொற்று பேரழிவை ஏற்படுத்தும். அதே நேரத்தில், தினசரி வருமானத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். கரோனா ஊரடங்கு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை கடுமையாக பாதித்துள்ளன.

ஏழை நாடுகளில் உள்ள குடும்பங்களுக்கு சத்தான உணவை வழங்குவது மிகவும் கடினம். நாங்கள் இப்போது செயல்படத் தவறினால், எதிர்கால சந்ததியினரில் உயிரிழப்பு, உடல்நலம், உற்பத்தித்திறனை எதிர்கொள்வோம். கரோனாவின் விளைவுகள் பல மாதங்கள், ஆண்டுகள், பல தசாப்தங்களாக உணரப்படுமா என்பதை தீர்மானிக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்டவர்கள், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவும், அதன் சமூக - பொருளாதார வீழ்ச்சியிலும் முதன்மையாக இருப்பதற்கான ஆபத்து உள்ளது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு போதிய உணவு நுகர்வு, நோய், திடீரென எடை இழப்பு காரணமாக ஏற்படுகிறது.

உடனடியாக உரிய சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மரணத்திற்கு வழிவகுக்கும். உணவுப் பாதுகாப்பில் கரோனாவின் சமூக - பொருளாதார தாக்கங்கள் காரணமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு 20 விழுக்காடு உயரக்கூடும் என்று உலக உணவு திட்டம் (WFP) மதிப்பிடுகிறது. இந்த எண்ணிக்கை உணவுப் பாதுகாப்பின்மையின் விளைவாகும்" என்றார்.

இதையும் படிங்க:ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.