கொல்கத்தா ஐஐஎம் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அரசுத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், "சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவின் ஏற்றுமதிக்கு விரிவுப்படுத்திக்கொள்ள சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள், பாகங்களை சீனா இறக்குமதி செய்து அவற்றை கருவிகளாக உருவாக்கிய பிறகே ஏற்றுமதி செய்கிறது. செல்போன் தயாரிப்பில் இந்தியாவும் இதேபோன்ற செயல்முறையைத்தான் பின்பற்றுகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அது (கொரோனா பாதிப்பு) இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது" என்றார்.
உள்நாட்டு மொத்த உற்பத்தி குறித்துப் பேசிய சுப்பிரமணியன், பொருளாதார ஆய்வறிக்கையின்படி அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.5 விகிதத்தில் வளர்ச்சி காணும் என்றார்.
மேலும், அத்தியவாசிய பொருள்கள் சட்டத்தை இந்தியா ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பேசிய சுப்பிரமணியன், பஞ்சம் நிலவிய காலத்தில் இதுபோன்ற சட்டங்கள் தேவையாக இருந்தன எனவும் ஆனால் இப்போது உள்ள சூழலில் இந்தச் சட்டம் தேவையற்றது எனவும் கூறினார்.
இதையும் படிங்க : ஆந்திராவில் கொரோனா வைரஸ் தாக்கியதாக நினைத்து ஒருவர் தற்கொலை