பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், 1897 தொற்றுநோய் சட்டத்தின் அடிப்படையில், இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
இச்சட்டம் குறித்து மேலும் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "மருத்துவர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ, துன்புறுத்தினாலோ அது தண்டனைக் குறியாகக் குற்றமாகக் கருதப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களால் பிணை பெறமுடியாது.
குற்றவாளிகளுக்கு மூன்று மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும், வழக்கின் தீவிரத்தைப் பொறுத்து, அது ஆறு மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பொருட்கள், சொத்துக்கள் சேதமடையும் பட்சத்தில் குற்றவாளிகளிடமிருந்து அப்பொருட்களின் சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு இழப்பீடு வசூலிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க : 'அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்' - கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் மருத்துவர்கள்