இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலாகி, மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவால் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. பொதுப் போக்குவரத்து, ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இதுவரை 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகை நடத்தப்படவில்லை என்றும்; மக்கள் அவரவர்கள் வீட்டிலேயே தொழுகையை நடத்திக் கொண்டார்கள் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: கரோனாவை வென்ற 10 பேர் - சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்