ETV Bharat / bharat

ஸ்ரீநகரின் 13 பகுதிகளில் ஊரடங்கில் தளர்வுகள் - Jammu and Kashmir Srinagar

ஸ்ரீநகர்: விரிவான ஆய்வுக்குப் பிறகு ஸ்ரீநகரின் 13 கட்டுப்பாடு பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களோடு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

Srinagar
Srinagar
author img

By

Published : May 28, 2020, 11:48 AM IST

ஜம்மு காஷ்மீரின் பெரிய நகரமான ஸ்ரீநகரில் கரோனா தொற்று காரணமாக இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சிலவற்றை முக்கிய வசதிக்காக தளர்த்தியுள்ளதாக நேற்று (மே 27) அதிகாரப்பூர்வமாக அரசு அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

கரோனா தொற்றால் சிவப்பு மண்டலமாக இருந்த பகுதிகள் குறித்து விரிவாக ஆய்வுசெய்யப்பட்டது. அதில் தகுதியான 13 கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் பேரில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று தளர்வுகள் அளிக்கப்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு மறுபடியும் ஏற்பட்டால் மீண்டும் அதனைச் சிவப்பு மண்டலமாக அறிவிக்க முடியும். தற்போதுவரை ஸ்ரீநகரில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் வீடு வீடாகச் சென்று எடுத்துவரும் சுகாதாரக் கணக்கெடுப்பு கிட்டத்தட்ட 87 விழுக்காடு முடிந்துள்ளது.

தற்போது கயாம், நாடிபோரா, சதாபல், ஜவஹர் நகர், ஹக்கா பஜார் ஹவால், ஆலம்தார் காலனி, போட்மேன் காலனி பெமினா, அகமது நகர், தெங்க்போரா புறவழிச்சாலை, வதல் கடல், பிராகன்வாரி போன்ற பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள 23 பகுதிகள் சிவப்பு மண்டலமாக உள்ளன.

தகுந்த இடைவெளி, தனிப்பட்ட சுகாதாரம், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் போன்றவைகளைப் பின்பற்றுமாறு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆதரவற்றோருக்கு அன்னை தெரசாவாகத் திகழும் கணினி நிறுவன இயக்குநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.