நாடு முழுவதும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடுமையான முறையில் ஊரடங்கு அனுசரிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே பொதுவெளியில் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்போதும் கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் பொது விநியோக அடிப்படையில் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் விநியோகம் பாதுகாப்பான முறையில்தான் வழங்கப்படுகிறதா என அனைத்து மாநில அரசுகளும் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிராம ஊரகப்பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் முறையான மேற்பார்வைக்குப்பின் வழங்கப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 12 ஆயிரத்து 759 பேர் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 420 பேர் வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வெளவால்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்' - ஐ.சி.எம்.ஆர்