இதுதொடர்பாக இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியர்கள் சீனா, சிங்கப்பூர், தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அவசியமின்றி பயணிக்க வேண்டாம்.
இந்நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இந்தியா வரும் அனைத்துப் பயணிகளும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.
சந்தேகம் ஏதுமிருந்தால் +91-11-23978046 என்ற 24 மணி நேர உதவி எண்ணையோ, அல்லது ncov2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளுங்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இதேபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்த சுகாதாரத்துறை சீனா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம் என இந்தியர்களை அறிவுறுத்தியிருந்தது.
சீனாவின் வூஹான் நகரில் தொற்றிய கொவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது தென் கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. டிசம்பர் மாதம் இறுதியில் பரவ ஆரம்பித்து இந்த வைரஸ் காரணமாக உலகளவில் இதுவரை 2800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : கொரோனா வைரஸ் - உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலிலிருந்து ஆறு அணிகள் விலகல்!