உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் வெளவால்கள் மூலமே பரவத் தொடங்கியதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெளவால்களிலிருந்து பாங்கோலின் என்ற விலங்கிற்குப் பரவி, அதை உட்கொண்ட சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியதாக இதுவரையிலான ஆய்வு முடிவுகள் மூலம் தெரிகிறது.
இந்நிலையில் இந்தியாவிலும் சில பகுதிகளிலிருந்து வெளவால்களை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் கேரளா, ஹிமாச்சல் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகியப் பகுதிகளில் உள்ள வெளவால்களில் கரோனா பாதிப்பு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியாவிலும் வெளவால்கள் மூலம் கரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சநிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ராமன் கங்காகேத்கர், ' பல வழிகளில் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்புகள் உள்ளதாக அறிவியல் சாத்தியகூறுகள் தெரிவிக்கின்றன. அதில் வெளவால்களும் ஒருவழியே. வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கு கரோனா பரவும் என்ற கூற்று, அரிதான ஒன்றே. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அரிதான நிகழ்வு குறித்து மக்கள் அச்சம்கொள்ள வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா: தமிழ்நாட்டுக்குதான் அதிக ரெட்