சீனாவின் வூகான் மாகாணத்தில் உற்பத்தியாகி உலக நாடுகளை அச்சுறுத்தும்வகையில் கொரோனா (கோவிட் 19) வைரஸின் தாக்கம் உள்ளது. இதன் வீரியம் சீனா மட்டுமின்றி ஹாங்காங், தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் தென்படுகிறது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியர்கள் யாரும் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சுகாதாரத் துறை அறிக்கையில், அவசியமற்ற சிங்கப்பூர் பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை சீனாவில் 2,300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை மூன்று லட்சத்து 97 ஆயிரத்து 152 பயணிகளும், ஒன்பதாயிரத்து 695 கப்பல் பயணிகளும் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பெங்களூருவில் 16 வயது சிறுவனுக்கு கட்டாய திருமணம் !