ETV Bharat / bharat

கரோனா: நாட்டில் உயிர் பலி 10ஆக உயர்வு - coronavirus death toll

Coronavirus
Coronavirus
author img

By

Published : Mar 24, 2020, 12:38 PM IST

Updated : Mar 24, 2020, 1:37 PM IST

12:35 March 24

மும்பை: கோவிட்-19 தொற்று காரணமாக மும்பையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள்  மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் 492 பேருக்கு கோவிட்-19 வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 36 பேருக்கு சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் சிகிச்சைப் பெற்றுவந்த 65 வயது மதிக்கதக்க நபர் தற்போது உயிரிழந்துள்ளார். இவர் சமீபத்தில்தான் ஐக்கிய அமீரகம் சென்றுவந்திருந்தார். இதனால், கோவிட்-19 வைரஸ் தொற்றால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழக இளைஞர் தற்கொலை?

Last Updated : Mar 24, 2020, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.