கரோனா வைரஸ் காரணமாக மக்கள் பொது இடங்கள், நிகழ்ச்சிகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனால், பல மாநிலங்களில் தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பிரபலமான திருப்பதி தேவஸ்தானத்தில் தினந்தோறும் 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தரிசனம் செய்கின்றனர். ஆனால், கரோனா வைரஸ் காரணமாக, பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், திருப்பதியில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற பூஜைகள் அனைத்தும் திட்டமிட்டப்படி திருப்பதியில் நடைபெற்றது.
இந்நிலையில், திருப்பதியில் முன்பு பதிவு செய்யப்பட்டிருந்த திருமணத்திற்கு மட்டும் கோயில் நிர்வாகம் அனுமதியளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று திருப்பதியில் உள்ள கல்யாண வேடிகா மண்டபத்தில் குண்டூர் பகுதியைச் சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் மண வீட்டாரின் குடும்பத்தினர் ஆறு பேர் மட்டும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா இளைஞர்களுக்குப் பரவுமா? - உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்