சீனாவில் முதன் முதலாக அறியப்பட்ட புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோய் முதலில் இருமல் மற்றும் தும்மலில் உள்ள பெரிய நீர்த்துளிகளில் இருந்து பரவும் என்று ஆய்வறிக்கைகள் வெளியானது.
ஆனால் தற்போது காற்றின் மூலமாகவும் வைரஸ் பரவ வாய்புள்ளது என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுகள் முடிவானவை இல்லை என்ற போதிலும் தேசிய அறிவியல் அகாடமி (NAS) வைரஸ் காற்றில் பரவும் என்ற கூற்றை மறுக்கவில்லை.
இப்போது வரை, மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர்கள் சார்ஸ் கோவ்-2 (SARS-CoV-2) எனப்படும் வைரஸ் காற்றில் பரவாது என்கின்றனர். மாறாக அதிகப்படியான இருமல் அல்லது தும்மும்போது வெளியாகும் பெரிய நீர்த்துளிகளால் பரவும்.
அந்த நீர்த்துளிகள் மேற்பரப்புகள் அல்லது ஏதேனும் ஒரு பொருளில் தேங்கி நிற்கும் போது அதனை தொடும் நபர்களை பாதிக்கலாம் என்கின்றனர். ஆகவே மக்கள் கட்டாயம் முகக் கவசங்களை அணிய வேண்டும் என்று ஹாங்காங் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இது தொடர்பாக அவர்கள், வைரஸால் ஏற்படும் சுவாச நோய்கள் உள்ளவரிடமிருந்து நீர்த்துளிகளை சேகரித்தனர். இதில் அவர்களுக்கு பல தகவல்கள் கிடைத்தது. அதன் பின்னர் முகக் கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.
ஏனெனில் முகக் கவசங்கள் அணிவதால், நீர்த்துளிகள் மற்றும் ஏரோசோல்கள் மூலமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க குறைந்தப்பட்சம் இரண்டு மீட்டர் தூரம் அவசியம்.
ஆனால் நீர்த்துளிகளில் வைரஸ் பரவும் போது இந்த இரண்டு மீட்டர் தூரம் போதுமானதாக இருக்காது. வைரஸ் அவ்வளவு தூரம் பயணிக்கும் ஆற்றல் மிக்கது. எனினும் வைரஸின் பயணம் மற்றும் மரபணு குணங்கள் குறித்து இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை. ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கிறது.
இன்றைய நிலவரப்படி கோவிட்-19 பெருந்தொற்று நோயிக்கு உலகில் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. இந்தியாவில் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எச்சரிக்கை.. பிரதமர் நிவாரணம் என்ற பெயரில் போலி யூ.பி.ஐ. கணக்குகள்!