கரோனா வைரஸால் உலகம் முழுவதும் பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே திண்டாடி வருகின்றனர். இதனிடையே மார்ச் 15ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடந்த சார்க் மாநாட்டில், கரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு உதவ வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
இதனால் மாலத்தீவிற்கு உதவுவதற்காக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 14 பேர் கரோனா வைரஸை எதிர்த்து போராட தேவையான ஆராய்ச்சி மையங்களையும், அந்த அரசின் மருத்துவர்களுக்கும் பயிற்சி வழங்கினர். அதேபோல் இந்த மாதத்தின் தொடக்கத்தில் 15 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் குவைத்திற்கு அனுப்பப்பட்டு உதவி செய்யப்பட்டது.
இந்நிலையில் இலங்கை, வங்கதேசம், பூடான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இந்தியா உதவ முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இந்தியாவிலிருந்து கரோனா வைரஸ் பாதிப்பின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்தை 55 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்த மருந்து இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், மியான்மர், நேப்பால், மாலத்தீவு, மொரிசியஸ், பூடான் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
இதையும் படிங்க: 'ஆர்பிஐ அறிவிப்பை பெருநிறுவனங்கள் பயன்படுத்தினால் பணப்புழக்கம் எகிறும்!