மகாராஷ்டிராவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. புனேயில் கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் நான்கு பேருக்கு கரோனா தொற்று பரவியிருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
சூரத்தில் 63 வயதான ஆண் ஒருவர் கரோனா தொற்றால் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். தற்போது, அவருடைய மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து மும்பை திரும்பிய ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ஸ்காட்லாந்து, துருக்கி, சவுதி ஆகிய நாடுகளுக்குப் பயணமானது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசு 284 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்துவருகிறது. அதேபோல், ஏழாயிரத்துக்கும் அதிகமானோரை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், கரோனாவால் பாதித்தோரைத் தனிமைப்படுத்துவதற்கு மையங்களை உருவாக்கியுள்ளதாகவும் அந்த மையங்களில் தற்போதுவரை 518 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாப் சிறையில் கைதிகளுக்கு முகக் கவசம் தயாரிக்கும் பயிற்சி