இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் அதன் வீரியம் குறையவில்லை.
இந்நிலையில், அசாம் மாநிலத்திலும் கரோனா வைரஸ் தாக்கும் அதிகளவில் உள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், "இன்று காலை 60 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், பிற்பகலில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இன்று ஒரே நாளில் மட்டும் 111 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தி 672ஆக உயர்ந்துள்ளது. மே 25ஆம் தேதி விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை விமானத்தில் பயணித்து வந்த 64 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.