இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள காட்சிப்பதிவில், ”புதுச்சேரியில் 1,486 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் 511 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இன்று 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,434 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் 2,127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 2,356 பேர். 7,761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 190 ஆக இருக்கிறது.
இன்று புதிதாக தொற்றுக்கு உள்ளான 511 பேரில், புதுச்சேரியில் 461 பேரும், காரைக்காலில் 31 பேரும், ஏனாமில் 13 பேரும், 6 பேர் மாஹேவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 275 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை 100% புதுச்சேரி அரசு கடைப்பிடித்து வருகிறது. புதுச்சேரி வந்துள்ள மத்திய குழுவோடு நேற்று ஆலோசனை நடத்தினோம்.
அவர்களின் அறிவுறுத்தல்படி கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு முடிவுகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரி சுகாதாரத் துறையுடன் விஞ்ஞானிகள் ஆலோசனை!