இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் வெளியிட்டுள்ள வீடியோப் பதிவில், ” புதுச்சேரிக்கு ’ரேபிட் டெஸ்ட் கிட்’ வந்துவிட்டது. இருப்பினும் ராஜஸ்தான் மாநிலத்தில், இக்கருவியைக் கொண்டு நடத்திய சோதனையில் மாறுபட்ட முடிவுகள் வந்துள்ளதை அடுத்து, மத்திய அரசு இந்தச் சோதனையை தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதி வந்த பின்னர் அடுத்தக்கட்டமாக சோதனை குறித்து முடிவு செய்யப்படும்.
முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு உதவும் வகையில், கிருமித் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கி வருவதால், அவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 23 ஆம் தேதி அவர்களுக்கு கரோனா நோய் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு அடுத்த நாள் முடிவுகள் தெரிவிக்கப்படும். இச்சோதனையானது சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா - அச்சத்தில் பத்திரிகையாளர்கள்!