மத்திய அரசின் ஆலோசனையைப் பின்பற்றி கேரளா, டெல்லி, ஜம்மு, காஷ்மீர் ஆகியப் பகுதிகளில் உள்ள பன்னடுக்கு திரையரங்குகள் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படவுள்ளன. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிவிஆர் திரையரங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில்," எங்கள் ஒவ்வொரு விருந்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் எங்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது. அதே சூழலில், அந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகத்தின் முடிவுகளை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளா, டெல்லி, ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த எங்கள் விருந்தினர்களுக்கு, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உலக தர சினிமா அனுபவத்தை தருகிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தலைநகரில் உள்ள அனைத்து சினிமா அரங்குகளும், மார்ச் 31 வரை மூடப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கொரோனா நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் இணைந்து செயல்படவேண்டும்'