புதுச்சேரியில் கரோனா நிவாரணமாக பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி வழங்க மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து அரிசிக்கு பதிலாக சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு ரூ. 2,200, மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 பணம் பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தார்.
அதன்படி இன்று (டிச.5) புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் பொதுமக்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதை பொதுமக்களுக்கு வழங்கினார்.
அப்போது அவருடன் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியேர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: புதுவையில் தேர்தல் வியூகம் வகுக்கும் காங்கிரஸ்!