நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், லூதியானா மத்திய சிறையிலிருக்கும் 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சிறை கண்காணிப்பாளர் ராஜூவ் அரோரா கூறுகையில், "கரோனா பாதித்த கைதிகளுக்காக தனியாக ஒதுக்கப்பட்டுள்ள போர்ஸ்டல் சிறையிலிருந்த கைதிகளுக்கு கரோனா பரிசோதனை நெகட்டிவ் வந்ததால், மீண்டும் 32 கைதிகளை டெல்லி மத்திய சிறைக்கு மாற்றினர்.
அவர்களுக்கு, இன்று (ஜூலை ஐந்து) மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வைரஸ் பரவாமல் தடுக்க கைதிகள் அனைவரும் சிறையில் தனிப் பகுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.