கர்நடகா மாநிலம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சரியான சிகிச்சை கிடைக்கவில்லை என இன்று அவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து மருத்துவர்கள், "கரோனா வைரஸ் உறுதிசெய்யப்படும் முன்னரே அவர் நான்கு ஆண்டுகளாகச் சிறுநீரக செயலிழப்பு, சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார்" எனத் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு அங்கு விரைந்த வி.வி. புரம் காவல் துறையினர் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ட்ரோன் பார்வையில் பார்ட்டி டவுன்... வெறிச்சோடிய பெங்களூரு!