புதுச்சேரி உழவர்கரை நகராட்சி பகுதியில் கரோனா பாதிப்புடன் வருவோரை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக அசோக் நகர் சமுதாயக்கூடம், ஜவஹர் நகர் சமுதாயக்கூடம் ஆகிய இடங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விமானம் மூலமாக லாஸ்பேட்டை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள், யாருக்காவது வைரஸ் பாதிப்பு இருந்தால் அவர்களை உடனடியாக அசோக்நகர் சமுதாய கூடத்தில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தங்களது பகுதியில் கரோனா தடுப்பு மையம் அமைக்க கூடாது என தங்கள் பகுதியில் தங்கவைக்க கூடாது என அரசு குடியிருப்போர் நல வாழ்வு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தங்களது தொகுதி சட்டசபை உறுப்பினரான சிவக்கொழுந்து, சுகாதாரத்துறை செயலர், உழவர்கரை நகராட்சி காவல் ஆணையர் ஆகியோரிடம் நேரில் சென்று மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைகளிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தங்கவைக்க வேண்டுமெனவும், பொதுமக்கள் அதிகம் இருக்கும் லாஸ்பேட்டை, உழவர்கரை, அசோக்நகர் பகுதிகளில் அவர்களுக்கு சிகிச்சையளிப்பது மேலும் நோய்தொற்றுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை இங்கு தங்கவைக்க கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி: சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் அதிரடி உயர்வு!