ETV Bharat / bharat

கோவிட்-19 பிடியில் ஸ்பெயின் இளைஞர்கள்! இந்தியாவுக்கு மருத்துவர் எச்சரிக்கை - கோவிட்-19

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நிலைமை விரைவில் மோசமடையக்கூடும் என்று எச்சரிக்கிறார் ஸ்பெயினில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் எத்தேல் செக்யூரா.

Corona on Spain youth  Corona on Spain  Spain youth affected in covid-19  ஸ்பெயினில் கரோனா பாதிப்பு  கரோனா பாதிப்பு  கோவிட்-19  ஸ்பெயின் இளைஞர்கள் நிலை

author img

By

Published : Apr 10, 2020, 9:17 AM IST

இது ஸ்பெயினின் வரலாற்றில் மிக மோசமான உடல் ஆரோக்கிய நெருக்கடி. வயதானவர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் மட்டுமல்ல, இளைஞர்கள்கூட கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 முதல் 14 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் இளைஞர்கள் சிறப்பாக குணமடைந்து வருகின்றனர். இளைய மக்களிடையே இறப்புக்கள் குறைவாக உள்ளது என்கிறார் கோவிட்-19 நோயாளிகளுடன் நெருங்கிப் பணிபுரியும் ஸ்பானிஷ் மருத்துவர் எத்தேல் செக்யூரா.

எத்தேல் ஸ்பெயினின் காஸநோவாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுகிறார். அவர் சர்வதேச சுகாதார கூட்டுறவு அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

2000ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டுவரை, ஆந்திராவின் அனந்தபூரில் ஊரக வளர்ச்சி அறக்கட்டளையில் மருத்துவராகப் பணியாற்றி உள்ளார். ஸ்பெயினின் தற்போதைய நிலைமை குறித்து ஈநாடு நாளிதழுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிற, வேறெதற்கும் யாரும் வெளியேறவில்லை. கோவிட்-19 உடன்பாடு சோதனைக்கு 36 ஆயிரம் பேர் உட்பட்டனர்.

அவர்களில் 13 ஆயிரத்து 500 பேர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. சீனாவில் வயதான மக்கள் nCoV நோய்த்தொற்றுக்கு ஆளாகும்போது, ஸ்பெயின் இளைஞர்களிடையே அதிக எண்ணிக்கையிலான நேர்மறை அறிகுறிகளைக் காண்கிறது. அரசாங்கம் விரிவாக சோதனை செய்து வருகிறது.

கரோனா வைரஸ் அறிகுறிகளைக் கொண்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. 70 சதவீத பாதிப்புகளில், ஆரம்ப சுகாதார சேவை மைய மருத்துவர்கள் நோயாளிகளை அழைப்புகள் மற்றும் ஆன்லைன் வழியாகவும் பரிசோதிக்கின்றனர்.

மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள்கூட அடிக்கடி பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நேரடி உடல் ஸ்பரிசம் இல்லாமல் சிறந்த வழிகளில் சிகிச்சை பெற்று வருகின்றன.

கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்படுகிறார்கள். சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அவர்களுக்கு வென்ட்டிலேட்டர் வழங்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லது வென்ட்டிலேட்டர் ஆதரவைப் பெறுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதுபோன்ற ஒரு சூழ்நிலையை அந்த நாடு பார்த்ததில்லை.

இளைஞர்கள்கூட 14 நாட்கள் மருத்துவமனைகளில் வைக்கப்படுகிறார்கள். இந்தத் தொற்றுநோயின் பயங்கரத்தை இது விளக்குகிறது. அனைத்து மருத்துவமனைகளும் பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதை நிறுத்திவிட்டன.

பன்முக சிறப்பு மருத்துவமனைகள் மட்டுமல்ல, ஆரம்ப சுகாதார சேவை மையங்களும்கூட அவற்றின் திறனைத் தாண்டி செயல்படுகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் திறன் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேர்மறை அறிகுறி பாதிப்புகள் அதிகரித்துவருவதால், தேவையான உபகரணங்களை வழங்க அரசாங்கம் கடுமையாக உழைத்து வருகிறது.

தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சேதம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். முதல் கோவிட்-19 பாதிப்பு பிப்ரவரி 24ஆம் தேதியன்று பார்சிலோனாவில் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் பாதிப்புகளின் எண்ணிக்கை பலமடங்குகள் உயர்ந்துள்ளன. தமக்கு எதிர்காலம் என்ன என்பதே யாருக்கும் தெரியாது. சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இந்தியாவில் நிலைமை விரைவில் மோசமடையக்கூடும்” என்றார்.

இந்தியாவில் பணிபுரிந்த அனுபவம் பெற்ற அவர், பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் சுகாதாரக் கட்டமைப்பு வீழ்ச்சியடையக்கூடும் என்றும் கூறினார். நிலைமை கட்டுக்குள் வரும்வரை தற்போதைய ஊரடங்கு நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவிக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.