புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 87 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சட்டப்பேரவை முதலமைச்சர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டு நாள்களுக்கு முதலமைச்சர் அலுவலகம் மூடப்படுகிறது.
இதற்கிடையை, பொது நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்ற வேண்டாம் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.