புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் அண்ணா சிலை அருகில் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், "மத்திய அரசு மானியமல்லாத சமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது. அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு விலையை உடனடியாக மத்திய அரசு குறைக்க வேண்டும். கச்சா எண்ணெய் பேரல் 40 டாலருக்கு வாங்கும் நிலையில், பெட்ரோல் விலை குறைந்தபட்சம் ரூ.40 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம், ஆனால் மத்திய அரசு ரூ.71.89 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.
எரிபொருளுக்கான மானியத்தை முழுவதும் மத்திய அரசு எடுத்துக்கொண்டு மக்களைச் சுரண்டுகிறது. பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி மக்கள் பேசக்கூடாது என்பதற்காக அதைத் திசை திருப்ப குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'முதலமைச்சரும், அமைச்சர்களும் என்னை குறைகூறுவது புதிதல்ல' - கிரண்பேடி