ETV Bharat / bharat

'குற்றவாளிகளின் வழக்கறிஞர் எனக்கு சவால் விடுத்தார்' - நிர்பயாவின் தாய் கண்ணீர்

டெல்லி: குற்றவாளிகள் ஒருபோதும் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என அவர்களின் வழக்கறிஞர் தனக்கு சவால் விடுத்தது தனக்கு வேதனையளிப்பதாக நிர்பயாவின் தயார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Convicts' lawyer challenged me, said they won't be executed, says Nirbhaya's mother

author img

By

Published : Feb 1, 2020, 9:56 AM IST

2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நான்கு பேருக்கும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தண்டனையை நிறைவேற்றிட வேண்டும் என டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குற்றவாளிகள் தரப்பிலிருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும், கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களைத் தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்திவருகின்றனர். இதற்கிடையே, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு, குற்றவாளிகளைத் தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டனர்.

இது குறித்து பேசிய நிர்பயாவின் தயார் ஆஷா தேவி, "தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டதில் எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் குற்றவாளிகள் ஒருபோதும் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் எனக்கு சவால் விடுத்ததில்தான் வேதனை அடைந்தேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...ஜாமியா துப்பாக்கிச் சூடு: குற்றவாளிக்கு 14 நாள்கள் காவல்!

Intro:Body:

Convicts' lawyer challenged me, said they won't be executed, says Nirbhaya's mother

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.