புதுச்சேரியில் அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் சார்பில் புதுச்சேரி கட்டுமான தொழிலாளர் நல சங்கத்தின் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச வீடு, கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், “குடிபெயர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் இலவச சோதனை செய்ய அனைத்து வசதிகளுடன் கூடிய நோய்க்காப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் வேலை இடங்களுக்குச் செல்ல விரும்பும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலை பயண ஏற்பாடுகள் செய்து மற்றவர்களுக்கு உள்ளூரில் வேலை உத்தரவாதம் அளிக்க வேண்டும். மாநிலங்களுக்கிடையே குடிபெயர்ந்த தொழிலாளர் சட்டம் முறையை செயல்படுத்த வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு அனைத்து அமைப்புசாரா விவசாய, இதர கிராமப்புற தொழிலாளர்களுக்கு வீடு திரும்பிய குடிபெயர் தொழிலாளருக்கு மாதம் ரூபாய் 10 ஆயிரம் வழங்கி உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலசுப்ரமணியன், அகில இந்திய தொழிற்சங்க மாநிலத் தலைவர் சோ மோதிலால், நிர்வாகிகள் முருகன், மல்லிகா உள்ளிட்ட அமைப்பினரும் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.