ETV Bharat / bharat

மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரின் பாதுகாவலர் மீது துப்பாக்கிச் சூடு - ஜம்முவில் துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர்: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரின் பாதுகாவலர் காயமடைந்தார்.

Security guard of PDP leader shot at in Srinagar

author img

By

Published : Dec 14, 2020, 3:01 PM IST

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள நாடிபோரா பகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் ஹாஜி பர்வாய்ஸ் அகமதுவின் பாதுகாப்பு காவலர் மன்சூர் அகமது மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த காவலர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் தீவிரவாதிகளை தொடர்ந்து தேடும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் ஹாஜி பர்வாய்ஸ் அகமதுவை குறிவைத்து நடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர். தனது வீட்டிற்கு அருகில் இருப்பவர்களை சந்திக்க ஹாஜி பர்வாய்ஸ் அகமது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.