மத்திய பிரதேச மாநிலம் ஜோத்பூர் பகுதியில் காவலர் சுபாஷ் என்பவர் தனது வாகனத்தில் போதைப் பொருள் கடத்துவதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவர்கள், சம்பவயிடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் சுபாஷ் காரிலிருந்து 190 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதையடுத்து அவரை கைது செய்த அலுவலர்கள், காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஜோத்பூர் காவல் கண்காணிப்பாளர், காவலர் சுபாஷ் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 20 கிலோ ‘மியோவ் மியோவ்’ போதைப்பொருள் பறிமுதல் - 5 பேர் கைது!