ETV Bharat / bharat

'திமுக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்' - நிர்மலா சீதாராமன்!

சென்னை: திமுக காங்கிரஸுடன் வைத்திருக்கும் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு நேரம் வந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் சீதாராமன் கூறியுள்ளார்.

nirmala sitharaman
nirmala sitharaman
author img

By

Published : Jun 25, 2020, 9:37 PM IST

நாட்டில் பாஜக ஆட்சியின் கடந்த ஓராண்டு சாதனைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜகவினர் மத்தியில் காணொலி அழைப்பின் வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், "இந்நாளில்தான் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி காங்கிரஸ் கட்சி, இந்தியாவில் அவசர கால பிரகடனத்தை அமல்படுத்தியது. தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டியும் பதவி பேராசைக்காகவும் அவசர காலத்தை பிரகடனப்படுத்தி, நாட்டில் பெரும் அராஜகத்தில் காங்கிரஸ் ஈடுபட்டது.

அப்போது அவர்களை எதிர்த்தவர்கள் அனைவரையும் சிறையில் அடைப்பது போன்ற பல்வேறு அட்டூழியங்களையும் காங்கிரஸ் கட்சியினர் செய்தனர். மேலும் அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

தொடர்ந்து திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் அக்கட்சி மேயரான சிட்டிபாபு, சிறையில் நடந்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் உயிரிழந்தார்.

இவ்வாறு காங்கிரஸ் கட்சி நாட்டில் அவசர நிலையைப் பிறப்பித்து, ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு, இப்போது ஜனநாயகத்தைக் குறித்து பேசுவது மிகவும் வேதனை அளிக்கிறது.

அத்தகைய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக, ஜனநாயகம், பேச்சுரிமை பற்றி பேசுவதற்கு உரிமை இல்லை. திமுக காங்கிரஸுடன் வைத்திருக்கும் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு, தற்போது நேரம் வந்துள்ளது" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், "கடந்த ஓராண்டில் பாஜக ஆட்சியில், ஜம்மு - காஷ்மீரில் 370 சட்டப் பிரிவை நீக்கியது, முத்தலாக்கிற்கு தடைவிதிப்பு, குடியுரிமைச் சட்டத் திருத்தம் உள்ளிட்டவற்றை செய்துள்ளோம். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் கிஷான் திட்டத்தின் மூலம் 14 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 35 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடிக்கும் அவர் நல்லாட்சிக்கும் கிடைத்த நல்ல வரவேற்பினால்தான், அவருக்கு இரண்டாவது முறையாக மக்கள் வாக்களித்துள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: எமர்ஜென்சி காலத்தின் தியாக செம்மல்களை நாடு மறவாது - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.