மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கமல்நாத், காணொலி வாயிலாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் கமல்நாத், “மத்தியப் பிரதேச வாக்காளர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு அமைதியான தீர்ப்பை அளிக்க காத்திருக்கின்றனர். சமூக வலைதளங்கள் மற்றும் இதர செய்திகள் வாயிலாக இதனை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஆகவே நான் உறுதியாக கூறுகிறேன், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். தற்போதைய பாஜக அரசாங்கம் அனைத்திலும் தோல்வியை கண்டுவருகிறது.
மாநிலத்தில் முறையாக கரோனா பாதிப்பாளர்கள் சோதிக்கப்படுவதில்லை. ஆனாலும் பாதிப்பாளர்கள் அதிகரித்துவருகின்றனர். காலியாகவுள்ள 24 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும்பட்சத்தில் அதில் காங்கிரஸ் 22 தொகுதிகளை மீண்டும் தக்கவைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் சிவராஜ்சிங் சௌகானும் பழைய தந்திரங்களை பயன்படுத்துகின்றனர். விவசாயம், சிறு தொழில்கள் என அனைத்தும் சரிந்துள்ளது. இந்தப் பொருளாதாரத்தை அவர்கள் எவ்வாறு சரிசெய்ய போகிறார்கள்? எனவும் கேள்வியெழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு