ETV Bharat / bharat

'காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி வரவேண்டும்' - லால் பகதூர் சாஸ்திரி மகன் விருப்பம்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு பிரியங்கா காந்தி வரவேண்டும் என முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் குமார் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Anil
Anil
author img

By

Published : Feb 24, 2020, 3:22 PM IST

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி சந்தித்ததையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தற்போது செயல்பட்டுவருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்யவேண்டும் என மூத்தத் தலைவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் மூத்தத் தலைவருமான சசி தரூர், ”பிரிவினைவாத அரசியலை முன்னெடுக்கும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மட்டுமே மாற்று அரசியலை முன்னெடுக்க முடியும். அதற்குத் தயாராகும் விதமாக காங்கிரஸ் விரைவில் தலைவரைத் தேர்வுசெய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

  • I believe a revived @INCIndia is indispensable to provide a national alternative to the divisive policies of the BJP. This is why the current perception of drift must be ended, as i explained to @PTI_News: https://t.co/mKOUZ8dIQB

    — Shashi Tharoor (@ShashiTharoor) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தக் கருத்தை வழிமொழியும் விதமாக முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகனும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான அனில் சாஸ்திரி, ”காங்கிரஸ் கட்சி தலைவருக்கு நேரு-காந்தி குடும்பத்தை அல்லாதோர் தலைமை தாங்குவது கட்சியை அழித்துவிடும். இந்திரா காந்தியைப் போல் கள அரசியல் தெரிந்த பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

  • There's no question of a non Gandhi taking over as Congress President at this stage. The party will cease to exist. Priyanka Gandhi should be elected to lead the party. She is meeting several Congresspersons & getting familiar with ground level realities. Indira Ji did the same.

    — Anil K Shastri (@anilkshastri) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காங்கிரஸ் கட்சிக்கு நேரு-காந்தி குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் தலைவராக முன்வரத் தயங்கிவருகின்றனர். தலைவர் பதவிக்கு மீண்டும் வர ராகுல் விருப்பம் காட்டாத நிலையில் பிரியங்கா காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என்ற குரல் கட்சிக்குள் அதிகரித்துவருகிறது.

இதையும் படிங்க: ட்ரம்ப் பார்க்கப்போவது 'புதிய இந்தியா'வை - முகேஷ் அம்பானி கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.