குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகப் போராடிவருகின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்களின் குடும்பங்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று சந்தித்துவருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, குடியுரிமை திருத்தச் சட்ட (சி.ஏ.ஏ.) எதிர்ப்புப் போராளிகளுக்கு சட்ட உதவி வழங்குவது குறித்து கருத்து கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தி சிறையில் வாடும் போராளிகளுக்கு இந்தச் சட்ட உதவி கிடைக்கவுள்ளது. முன்னதாக பிரியங்கா காந்தி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற ஒருவரின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் பின்இருக்கையில் அமர்ந்து பயணித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 'கோலம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதால் காவல்துறை நடவடிக்கை'