கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்திலுள்ள அனாஜ் காய்கறி சந்தைக்கு காங்கிரஸ் எம்பி ரன்தீப் சுர்ஜீவாலா சென்றுள்ளார்.
இங்கு, கடுகு, கோதுமை போன்ற விளைபொருள்களை கொள்முதல் செய்ய வந்தவர்களுடன் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் உரையாடியுள்ளார். இது கரோனா வைரஸிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை அவமதிப்பது போன்ற செயல் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவும் வாய்ப்பு அதிகளவில் உள்ளதால், பொது இடங்களில் மக்கள் கூடுவதை அரசுகள் கட்டுப்படுத்திவருகின்றன.
ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. ஊரடங்கு விதிகளை மீறியுள்ளது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பேசுபொருளாகிவருகிறது.
இதுவரை ஹரியானாவில் 254 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 127 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தெலுங்கு தேசம் கட்சியை சாடிய எம்எல்ஏ ரோஜா