சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெற்ற 'ஹவுடி மோடி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், சமீபத்தில் மோடி குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "சிதறிக்கிடந்த இந்தியாவை ஒன்றுசேர்த்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஒரு தந்தையைப் போன்று இதனை அவர் மேற்கொண்டுள்ளார். மோடிதான் இந்தியாவின் தந்தை" என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி, "இந்தியர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. தேசத்தின் தந்தை யார் என்று அவர்களுக்குத் தெரியும். அந்நியர் யாரும் நம் நாட்டின் தந்தை யார் என்று விளக்கத் தேவையில்லை" என்று காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
மேலும், அகிம்சையையும் அமைதியையும் விரும்பும் ஒரு உன்னத மனிதன்தான் இந்த தேசத்தின் தந்தையாக இருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: இங்கு பொருளாதாரக் கொள்கையே தவறாக உள்ளது - பிரியங்கா காந்தி