சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள், இந்திரா காந்தி நினைவுநாள் நிகழ்வு, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அங்கு அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி, வல்லபாய் பட்டேல் உருவப்படங்களுக்கு அவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ” புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி சிற்றுண்டி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்“ என்றார்.
தொடர்ந்து பேசிய தினேஷ் குண்டுராவ், தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'எத்தனை கட்சிகள் வந்தாலும் வெல்வது அதிமுகதான்!'