மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா கூறுகையில், "ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதே கமல்நாத் அரசு கவிழ்வதற்குக் காரணமாக அமைந்தது. இந்த வாய்ப்புக்காகத் தான் பாஜக காத்துக் கொண்டிருந்தது.
பல மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து பல மாநிலங்களில் அக்கட்சிக்கு இந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது.
ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அதனை வீணடிக்காமல் பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறது" என்றார். கர்நாடகா, கோவா, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஜனநாயகத்தை வீழ்த்திய விடுதி அரசியல்' - காங்கிரஸ் விமர்சனம்