குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஈடிவி பாரத்துக்கு டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி அளித்த பேட்டி வருமாறு;
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் சதி உள்ளது. வாக்கு வங்கிக்காக முஸ்லிம்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது.
இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களிடத்தில் எதிர்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு மனோஜ் திவாரி கூறினார்.
மேலும் ஜாமியா மசூதியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சோயப் இக்பால் கலந்து கொண்டதையும் கண்டித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் அகதிகளாக இந்தியா வந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராகுல் காந்தியை பொய்யர் என விமர்சித்த பிரகாஷ் ஜவடேகர்