ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம், செப்டம்டர் 5ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமின் வழங்க அவர் பல மனுக்கள் அளித்திருந்தாலும், அவை தள்ளுபடி ஆகிக்கொண்டே இருந்தன.
சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், அவரைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் திகார் சிறைக்கு தற்போது சென்றுள்ளனர்.
இதையும் படிங்க:ப.சிதம்பரம் பிணை மனு - நாளை வரை ஒத்திவைப்பு!