மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டெல்லி வீர்பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி , அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் உள்ளிட்ட பல தலைவர்களும் மரியாதை செலுத்தினார்கள்.