பிரதமர் நிவாரண நிதி தொடர்பாக அவதூறு பரப்பியதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷேர்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நிவராண நிதி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பாஜகவின் சர்வாதிகார மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. வெளிப்படைத்தன்மை உறுதி செய்வதற்காக காங்கிரஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக பாஜக ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னதாக, ட்விட்டர் பக்கத்தின் மூலம் தவறான தகவலைப் பரப்பியதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா நிவாரணத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பி.எம்.கேர்ஸ் ஃபண்ட்(PM CARES FUND) என்னும் பிரதமர் சிறப்பு நிதி குறித்து அவதூறு தகவலை பரப்பியதாகக் கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரத்யேக ட்விட்டர் கணக்கு இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட கணக்கை சோனியா காந்தி இயக்குவதாகவும், அதிலிருந்து பிரதமர் நிதி குறித்து அவதூறு தகவல் பரப்பப்படுவதாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: 2 மணி நேரத்தில் 1.5 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு!