மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 295 சட்டப்பேரவை தொகுதிகளில், காலியாகாஞ், காராக்பூர் மற்றும் கரிம்பூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
காலியாகாஞ் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரமாதநாத் ராய் இறந்ததாலும், காராக்பூர், கரிம்பூர் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்களான அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ், திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த மொய்த்ரா ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக தேர்தெடுக்கப்பட்டதாலும் இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் மித்ராவிடம், காங்கிரஸ் இடைக்கால தலைவரான சோனியா காந்தி நடத்திய பேச்சிவார்த்தையில், காலியாகாஞ், காராக்பூர்ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் நிற்பதற்கும், கரிம்பூரில் கம்யூனிஸ்ட் போட்டியிடவும் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.