ETV Bharat / bharat

தேர்தல் விதிமுறைகளில் மாற்றம்: திரும்பப்பெற காங்கிரஸ் வாதம்!

தேர்தல் விதிகளை மத்திய அரசு திருத்தியதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி, இந்த முடிவு சட்டவிரோதமானது என்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும் என்று கூறி அதை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்
author img

By

Published : Jul 4, 2020, 7:10 PM IST

டெல்லி: 65 வயதும், அதற்கும் மேற்பட்ட வயதுடைய வாக்காளர்களும், கரோனா நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் தபால் வாக்குச் சீட்டு வசதியைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும் வகையில், தேர்தல் விதிகளை மத்திய அரசு திருத்தியதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி, இந்த முடிவு சட்டவிரோதமானது என்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும் என்று கூறி அதை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது

காங்கிரஸ் தலைவர்கள் அஹ்மத் படேல், அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல், கே.சி.வேணுகோபால் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணைய அலுவலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக மேற்கொண்ட சந்திப்பில் இதற்கான மனுவை அளித்தனர்.

மக்களவைத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் மட்டுமே தற்போது தபால் மூலம் தங்களது வாக்குகளை செலுத்த முடியும்.

இச்சூழலில், நாடு முழுவதும் தற்போது பரவலாக கரோனா நோய்க் கிருமித் தொற்று பாதிப்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, 65 வயதுக்கு மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள், கோவிட்-19 நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் ஆகியோரும் இனி எதிர்வரும் தேர்தல்களில் தபால் வாக்கு செலுத்த வசதியாக, தேர்தல் விதிமுறைகளில் உரிய மாற்றங்களை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் என எதுவாகயிருந்தாலும், வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் ஓட்டுக்கள் தான் முதலில் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு வரை, அடுத்தடுத்து சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.