ETV Bharat / bharat

'கரோனாவால் வேலையிழப்பு அமெரிக்காவை விடஇந்தியாவில் அதிகம்' - நிதி ஆயோக்

டெல்லி: கரோனா பாதிப்பால் அமெரிக்காவை காட்டிலும் நான்கு மடங்கு வேலையிழப்பு இந்தியாவில் அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி விமர்சித்துள்ளார்.

அபிஷேக் சிங்வி
அபிஷேக் சிங்வி
author img

By

Published : May 21, 2020, 12:09 AM IST

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி,

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஏப்ரல் 24ஆம் தேதிக்குப் பிறகு அதிகரிக்கத் தொடங்கி மாத இறுதியிலிருந்து படிப்படியாக குறைந்து மே 16ஆம் தேதிக்குப் பிறகு எண்ணிக்கை சரிந்து பூஜியத்திற்கு கொண்டுவரப்படும் என்று நிதி ஆயோக் கூட்டத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதன் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய சிங்வி,

மே 16ஆம் தேதிக்குப் பின்பு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.

நாட்டில் கரோனா பாதித்து இறப்பு விதம் 3.08 விழுக்காடு இருந்துவரும் நிலையில் பரிசோதனை செய்யப்படுவது 1.5 விழுக்காடு என்றார்.

மேலும் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை திட்டங்கள் இல்லாமல் ஊரடங்கை அறிவித்ததின் விளைவு நாட்டில் வேலையிழப்பு அதிகரித்து வேலைவாய்ப்பின்மை 27.01 விழுக்காடு அளவு உயர்ந்துள்ளது இது அமெரிக்காவை காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் எனத் தெரிவித்தார்.

கரோனா பாதிப்பு தொடர்பாக எவ்வித வல்லுணர்களையும் ஆலோசிக்காமல் ஆட்டோ பைலட் முறையில் நாட்டை நேர்மையில்லாமலும் திறமையில்லாமலும் தவறாக வழிநடத்தி செல்லும் பாஜக அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.