பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி சிங் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். இந்த மரணம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்த பிரச்னை தொடர்பாக மகாராஷ்டிரா மற்றும் பிகார் அரசு இடையே மோதல் போக்கு நிகழ்ந்துவருகிறது. மகாராஷ்டிராவின் சிவசேனா கூட்டணி அரசை எதிர்கட்சியான பாஜக தொடர்ச்சியாக விமர்சித்து அழுத்தம் கொடுத்துவருகிறது. இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்து பாஜக பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் லாபம் தேட நினைப்பதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், பாஜக ஜனநாயக அரசியலில் புதிய தாழ்ச்சியை உருவாக்கியுள்ளது. பிகாரில் வந்த வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதை சூழலில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
இந்த சூழலில் சுஷாந்த் சிங் மரணத்தை வைத்து பிகாரில் அரசியல் லாபம் தேட பாஜக முயற்சி செய்துவருவதாக ரந்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வீடுகளில் காய்கறி செடிகளை வளர்ப்பது அவசியம்!